மாற்றமடைந்த கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானது- பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

by Web Team
0 comment

பிரிட்டனில் பரவிவரும் உருமாறிய கொரோனா, முந்தைய கொரோனாவை விட ஆபத்தானது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், மாற்றமடைந்த கொரோனா வேகமாக பரவும் தன்மையோடு அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறினார்.

லண்டனில் உள்ள இம்பிரீயல் கல்லூரியை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் உருமாறிய கொரோனாவின் தீவிரம் குறித்து ஆராய்ச்சி நடத்தினர்.

அதில், முந்தைய கொரோனாவை விட, உருமாறிய கொரோனா மிகவும் ஆபத்தானது என கூறினர். அதே சமயம் அது எந்த அளவிற்கு அதை உறுதிப்படுத்துவது என்பது தெரியவில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆனால் பழைய கொரோனா வைரசினால் ஆயிரம் பேரை தாக்கினால், அதில் 10 பேர் மட்டுமே உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் புதிய உருமாறிய கொரோனாவால், உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆக அதிகரித்திப்பதகாவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related Posts

Leave a Comment