தினமும் ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுவதால் உடம்பில் என்னலாம் நடக்கும் தெரியுமா?

by Lifestyle Editor
0 comment

நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பொருட்களில் ஓன்று பச்சை மிளகாய். இதனை பலர் காரமாக இருக்கின்றது என்று ஒதுக்குவது உண்டு.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களும் வளமான அளவில் நிறைந்துள்ளன.

அந்தவகையில் பச்சை மிளகாயை தினமும் ஒன்று சாப்பிடுவதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் என்னவென்பதைக் காண்போம்.

  • பச்சை மிளகாய் எடையை இழக்க நினைப்போருக்கு ஒரு அற்புதமான உணவுப் பொருள். ஏனெனில் இதில் கலோரிகள் குறைவு மற்றும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். மெட்டபாலிசம் என்னும் செயல்முறையில் தான் உணவுகளானது உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றப்படுகின்றன. இதன் போது கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடையை இழக்கச் செய்கின்றன.
  • பச்சை மிளகாயில் பீட்டா-கரோட்டின் உள்ளது. இது இதய செயல்பாட்டை முறையாக பராமரிக்க உதவுகிறது. மேலும் இது இரத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவையும் குறைக்க உதவி, பெருந்தமனி தடிப்பு ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது. இதன் விளைவாக இதய நோயின் அபாயம் குறையும்.
  • பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. இது சவ்வுகளிடையே இரத்த ஓட்டத்தைத் தூண்டி, உடலில் உற்பத்தியாகும் சளியை இளகச் செய்கிறது. சளி, ஜலதோஷத்திற்கு காரணமான தொற்றுக்களை அழிக்க உதவி, நல்ல நிவாரணத்தை அளிக்கும்.
  • பச்சை மிளகாயில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி மற்றும் பீட்டா-கரோட்டின் உள்ளது. ஆனால் பச்சை மிளகாயை ஒரு டப்பாவில் போட்டு மூடி, குளிர்ச்சியான இடத்தில் வைத்தால் தான், அதில் உள்ள வைட்டமின் சி நீடித்திருக்கும். இல்லாவிட்டால், வெளிக்காற்று, சூடான மற்றும் சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால், அதில் இருக்கும் வைட்டமின் சி குறைந்துவிடும்.
  • சர்க்கரை நோயைக் கொண்டவர்கள் பச்சை மிளகாயை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்கலாம்.
பக்க விளைவுகள்
  • சர்க்கரை நோய்க்கான மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது பச்சை மிளகாயை சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்து போக வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருக்க வேண்டும்.
  • பச்சை மிளகாயில் உள்ள எரிச்சல் ப்ளேவர்கள், தீவிரமான நெஞ்செரிச்சலை உண்டாக்கும் திறன் கொண்டவை. அதோடு பச்சை மிளகாயை அதிகமாக சாப்பிட்டால், அது கடுமையான எரிச்சலுடன் கூடிய வலியை உண்டாக்குவதோடு, உடலினுள் அழற்சி/காயங்களையும் உண்டாக்கும்.
  • பச்சை மிளகாயை அதிகம் சாப்பிட்டால், அது சிலருக்கு அடிவயிற்று வலி அல்லது வலிமிக்க வயிற்றுப்போக்கை உண்டாக்கக்கூடும்.
  • நீங்கள் பச்சை மிளகாயால் செரிமான பிரச்சனையை சந்தித்து, தொடர்ந்து பச்சை மிளகாய் சேர்த்த உணவை உண்ணும் போது, அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
  • பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. இந்த கேப்சைசின் அளவுக்கு அதிகமாக உடலினுள் சென்றால், அது சரும அழற்சியை உண்டாக்கும். எனவே பச்சை மிளகாயை அளவாக சாப்பிடுங்கள்.

Related Posts

Leave a Comment