ராகுல் காந்தி – “தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க வேண்டியது என் கடமை”

by Lifestyle Editor
0 comment

தமிழர் பாரம்பரியத்தை காக்க வேண்டியது தன் கடமை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவனியாபுரத்தில் பேசினார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது. அதில் பங்கேற்க காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி டெல்லியில் இருந்து மதுரைக்கு தனி விமானத்தில் வந்தடைந்தார். அவருக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின், நிகழ்ச்சியின் போது ராகுல் காந்தியுடன் கலந்துரையாடினார். தலைவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு களித்தனர்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, தமிழ் காலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் காக்க வேண்டியது தன் கடமை என்று கூறினார். தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் காலாச்சாரமும் பாரம்பரியமும் இந்தியாவிற்கு தேவையான ஒன்று. அவை மதிக்கப்பட வேண்டியவை. உங்களது உணர்ச்சிகளையும் கலாச்சாரத்தையும் பாராட்டுவதற்காகவே தமிழகம் வந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றேன் என்றும் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment