மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்ப திருவிழா ஜன.17ல் தொடக்கம்…

by Lifestyle Editor
0 comment

மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பதிருவிழா வரும் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஜனவரி 28ஆம் தேதி வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக மீனாட்சி அம்மன் கோயில் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில், தெப்ப திருவிழாவையொட்டி வரும் 17ஆம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் தொடர்ந்து, ஜனவரி 23ஆம் தேதி சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை நிகழ்வும், 24ஆம் தேதி வலைவீசி அருளிய லீலையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 25இல் புகழ்பெற்ற தெப்பம் முட்டு தள்ளும் நிகழ்வும், ஜனவரி 27ஆம் தேதி கதிர் அறுப்பு திருவிழாவும் நடைபெறு உள்ளது. திருவிழாவின் இறுதிநாளான ஜனவரி 28ஆம் தேதி தெப்ப திருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி, அன்றைய தினம் காலை 10.34 மணிக்கு மாரியம்மன் ஜெபத்தில் தெப்பத்தில் எழுந்தருளுகிறார். தொடர்ந்து, இரவு 8 மணிக்கு மேல் சுந்தரேஸ்வரர் சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் அவதார தொட்டிலிலும் கோவிலுக்கு புறப்பாடு செய்கின்றனர்.

திருவிழாவை ஒட்டி நாள்தோறும் அம்மனும், சுவாமி சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனங்களில் உலா வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தெப்ப திருவிழா நடைபெறும் ஜனவரி 28ஆம் தேதி அன்று கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

Related Posts

Leave a Comment