கொண்டாட்டம் மட்டுமே! பிக்பாஸ் 101 நாள்

by Lifestyle Editor
0 comment

போட்டியாளர்கள், விருந்தினர்களோடு பிக்பாஸூம் உற்சாகமாகக் கொண்டாட்டாத்தைத் தொடங்கிய எப்பிசோட் நேற்றையது. போட்டியாளர்களிடமிருந்து ஜாலியான கண்டண்ட் கிடைக்க வில்லை என்றதும் ‘நானே களத்தில் இறங்குறேண்டா’ என்று பிக்பாஸே களத்தில் குதித்தார்.

‘நீங்க சந்தோஷமா இல்ல… ஜாலியாக ஏதும் செய்யல’ என நூறாவது முறையாக ரியோ சொன்னதும், ராஜபார்ட் ரங்கத்துரை படத்தின் ராஜா கேரக்டர்போல சோபாவில் இருக்கமாக உட்கார்ந்துகொண்டு ‘அது உங்கள் பார்வை’ என இருநூறாவது முறை விளக்கிக்கொண்டிருந்தார் ஆரி.

பிக்கி மீண்டும் ஒரு வீடியோவை ஒளிபரப்பினார். ஒவ்வொருவர் பற்றிய நெகிழ்ச்சியான சம்பவங்கள் அடங்கிய வீடியோ. இதிலும் ஆரியைத் தேட வேண்டியதாயிற்று. அநேகமாக இன்று பிக்பாஸ் வீட்டில் சண்டை போடும் வீடியோ போட்டால் எல்லா ஃப்ரேம்களிலும் ஆரிதான் நிற்பார் போல.

அனிதாவின் அப்பா ஓரிரு வாரங்களுக்கு முன் தான் இறந்திருந்தார். அதனால், அனிதா வருவது சந்தேகம் என்றுதான் நினைத்தோம். ஆனால், சோகத்துடன் எண்ட்ரி கொடுத்தார் அனிதா. கேபி ஓடிச்சென்று கட்டிக்கொண்டார்.

ஆரி பழைய நினைப்பில் அட்வைஸ் சொல்ல ஆரம்பிக்க, ‘உங்களை எதிர்த்து பேசியதால் ட்ரோல் பண்ணியதையும் அப்பா இறந்ததையும் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியவில்லை. பிரபாதான் கவனிச்சிகிட்டார்’ என நிதானமாகப் பதில் அளிக்க ஆரி திகைத்தார்.

அனிதா அப்பா இறப்புக்கு வருத்தம் தெரிவித்தார் பிக்கி. பிறகு சொர்க்கபுரி vs அரக்கர் கூட்டம் டாஸ்க்கை திரும்பவும் வைத்தார் பிக்கி. அதில் பின் குறிப்பாக, இது ஜாலியான விளையாட்டு மட்டுமே என்று சொல்லி வைத்தார். ஆரி, கேபி, அர்ச்சனா,சுசித்ரா, சம்யுக்தா, ரமேஷ், ஆஜித் ஆகியோர் ராஜா குடும்பம் மற்றவர்கள் அரக்கர். அவர்களில் ஆஜித், சம்யுக்தா இருவரையும் சிரிக்க வைத்தனர். ஆரி, கேபி, சுசித்ரா ஜாலியான விளையாட்டு என்றாலும் விட்டுக்கொடுக்க வில்லை.

’என்ன ரம்யா… டைட்டில் வின் பண்ணுவீங்கன்னு பார்த்தால் விஷப் பாட்டில்னு சொல்லி கலாய்க்கிறாங்களாமே’ என்று கேட்டார் பாலா. வெளியில் இருந்து செல்பவர்களை இப்படி நாள் கணக்கில் தங்க வைத்தால் இதுதான் நடக்கும். போட்டியாளர்களை மூட் அவுட் செய்வதையே வாடிக்கையாக கொண்டுவிடுவார்கள். ஆனால், ரம்யா அதை பெரிதாக எடுத்துக்கொண்டதுபோல தெரியவில்லை.

போட்டியாளர்களுக்கு மட்டும், கண் கட்டி பந்து உதைத்தல் போட்டியை நடத்தினார் பிக்கி. கேபி அதிக முறை சரியாக கோல் அடித்து வெற்றி பெற்றார். அதற்கு பீட்ஸா அனுப்பி மகிழ்ச்சிப் படுத்தினார்.

இன்னும் சில நாட்களே இருக்கின்றன இறுதி நாளுக்கு. அதனால், இப்படியே மகிழ்ச்சியாகவே இருப்பார்கள் போல. இதனால், ஆடியன்ஸ் ஓட்டு போடுவதில் குழப்பம் ஏற்படக்கூடும். இறுதிப் போட்டியாளர்கள் யார் என்பதிலேயே குழப்பம் வரலாம்.

Related Posts

Leave a Comment