தேங்காய் சாதம் செய்வது எப்படி ?

by Lifestyle Editor
0 comment

தேங்காய் பாலுடன் முந்திரி, காய்ந்த திராட்சை கலவையுடன் தயாரிக்கப்படுவது.

தேவையான பொருட்கள்

1லு தேக்கரண்டி நெய்
2 குச்சி லவங்கம்
3 கிராம்பு
2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
2 கப் அரிசி
2 கப் தேங்காய் பால்
1 கப் தண்ணீர்
1/2 தேக்கரண்டி உப்பு
2 மேசைக்கரண்டி துருவிய தேங்காய்
10 முந்திரி, உடைத்தது
15 காய்ந்த திராட்சை

செய்முறை

1 பாத்திரம் லேசாக சூடானதும் நெய் சேர்க்கவும். லவங்கம், கிராம்பு, பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும்.
2 அரிசியை சேர்த்து சில நிமிடங்கள் கிளறவும்.
3 தேங்காய் பாலையும், தண்ணீரையும் சேர்த்து, தீயை கொஞ்சம் அதிகமாக்கி கொதிக்க விடவும். பின்னர் தீயைக் குறைத்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை மூடி தண்ணீர் வற்றும் வரை கொதிக்க வைக்கவும்.
4 துருவிய தேங்காய், முந்திரி, காய்ந்த திராட்சை தூவி, முள் கரண்டி கொண்டு அரிசியை லேசாக கிளறி சூடாக பரிமாறவும்.

Related Posts

Leave a Comment