நிலைமை மோசமாக உள்ளது! உடனே இந்த கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துங்கள்: பிரித்தானியா அரசுக்கு லண்டன் மேயர் வலியுறுத்தல்

by Lifestyle Editor
0 comment

பிரித்தானியா தலைநகரில் நிலைமை மோசமாக உள்ளதால் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்துமாறு நகர மேயர் சாதிக் கான் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

லண்டனில் ஜனவரி 12ம் திகதி மட்டும் 8,559 பேருக்கு கொரோனா உறுதியானது.

இந்நிலையில் லண்டன் மேயர் சாதிக் கான் ட்விட்டரில் பதிவிட்டதாவது, கட்டுப்பாடுகள் எளிதாக இருப்பதால் மார்ச் மாதத்தை விட லண்டனில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மோசமடைந்துள்ளது.

அதே சமயம் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலையும் நாம் எதிர்கொள்கிறோம். இதே நிலை தொடரக்கூடாது. அரசாங்கம் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டும்.

இதை தவிர எங்களுக்கு வேறுவழியில்லை. எந்தெந்த வணிகங்கள் திறந்திருக்க வேண்டும் என்பது குறித்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தனிமைப்படுத்தல், மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே ஆதரவு bubbles வழங்குவது அவசியம்.

லண்டன்வாசிகளுக்கு மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியும்.

என்னை நம்புங்கள், இந்த நிலைமை மிகவும் தீவிரமாக இல்லாவிட்டால் நாங்கள் இந்த கோரிக்கையை வைக்க மாட்டோம். உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், NHS பாதுகாப்பதற்கும் எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment