அமெரிக்காவில் நேற்று மட்டும் 2 இலட்சத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்

by Lankan Editor
0 comment

அமெரிக்காவில் நேற்று மட்டும் கொரோனா வைரஸ் தொற்றினால் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்காவில் 2 இலட்சத்து 23 ஆயிரத்து 628 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 33 இலட்சத்து 69 ஆயிரத்து 732 ஆக உயரந்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்று உறுதியான மேலும் 4 ஆயிரத்து 281 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 89 ஆயிரத்து 621 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று உறுதியானவர்களில் இதுவரை 1 கோடியே 38 இலட்சத்து 16 ஆயிரத்து 238 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment