பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வந்த ஒருவர் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.இத் தகவலை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிரித்தானியா மற்றும் பல நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு காணப்படுவதாக தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேராசிரியர் நீலிக மாளவிகே மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக ஆய்வு குழு இதனை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.