இலங்கையில் 49 ஆயிரத்து 500க் கடந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

by Lankan Editor
0 comment

இலங்கையில் மேலும் 588 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆயிரத்து 770 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 04பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 537ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 6 ஆயிரத்து 672 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆயிரத்து 621ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 603 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 244 ஆக அதிகரித்துள்ளது.

Related Posts

Leave a Comment