உங்களுடைய ஏ.டி.எம். பின் நம்பரை அடுத்தவருக்கு சொல்ல வேண்டியது அவசியமா? கட்டுரை: ரோஷ்னி மித்ரா
நிதி சார்ந்த ஆவணம்
இதை வீட்டிலுள்ள தீப்பிடிக்காத பெட்ட கத்தில் வையுங்கள், அதற்கான சாவி உங்க ளிடமும் உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரிடமும் இருக்க வேண்டும். மேலும் பாஸ்வேர்டு பாதுகாப்புள்ள உங்களுடைய சொந்த கம்ப்யூட்டரில் பி.பி.எஃப்., மருத்துவக் காப்பீடு அல்லது ஃபிக்சட் டெபாசிட் போன்ற நிதி ஆவணங்களின் விவரங்களையும் ஒரு எக்செல் ஃபைலில் எழுதி வையுங்கள். இதில் பிரீமியம் அல்லது போனஸ் கிடைக்கும் தேதிகள் உள்ளிட்ட கணக்கு விவரங்களையும் சேர்க்கலாம். “அதில் உங்களின் நிதிசார் பொறுப்புக்கள், கடன் பற்றிய விவரங்களை முறைப்படி வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்,” என்கிறார் வர்ஷா.
பின் நம்பர்கள்
பின் நம்பர்களையும் பாஸ்வேர்டுகளையும் மாதத்துக்கு ஒரு முறையாவது மாற்றும்படி சில வங்கிகள் கேட்டுக் கொள்கின்றன. எனவே குடும்ப உறுப்பினரிடம் அதை பகிர்ந்து கொள்ள முடியாமல் போகலாம். ஒரு கம்ப்யூட்டர் ஃபைலை உருவாக்கி அதை உங்களுடைய பார்ட்னர் அல்லது பெற்றோர்களுடன் பகிர்ந்துகொண்டு அதே ஃபைலில் உங்களுடைய பாஸ்வேர்டுகளை அப்டேட் செய்வது சிறந்த வழியாக இருக்கும்.