முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி ?

by Lifestyle Editor
0 comment

சுவையான கிரேவியில் வேகவைக்கப்பட்ட முருங்கைக்காய் தென் இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் உணவு.

தேவையான பொருட்கள்:

2 மேசைக்கரண்டி எண்ணெய்
1/2 தேக்கரண்டி கடுகு
1/2 தேக்கரண்டி வெந்தயம்
1/4 தேக்கரண்டி உளுந்து
1 தேக்கரண்டி சீரகம்
3 காம்பு கறிவேப்பிலை
4 நறுக்கிய வெங்காயம்
முருங்கைகாய்கள் 10
1/2 தேக்கரண்டி மஞ்சள்
1/2 மேசைக்கரண்டி மல்லி தூள்
1 தேக்கரண்டி மி.தூள்
400 மி.லி. நீர்
உப்பு, சுவைக்கேற்ப
1 மேசைக்கரண்டி கடலைமாவு, 200 மி.லி. தேங்காய் பாலில் கரைக்கப்பட்டது
கொத்தமல்லி இலைகள்

செய்முறை:

1 வாணலியில் எண் ணெயை சூடாக்கி கடுகு, வெந்தயம், உளுந்து, சீரகம், கறிவேப் பிலையைப் போடவும்.
2 வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வறுக்கவும். முருங் கைக்காய், மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்த்து கலக்கவும். நீரும் உப்பும் சேர்த்து, முருங்கைக்காய் வேகும் வரை விடவும்.
3 கடலை மாவு, தேங்காய் பால் கலவையை அதில் கொட்டி கலக்கவும். கிரேவி கெட்டியாகும் வரை சமைத்து, கொத்தமல்லி யால் அலங்கரிக்கவும்.

Related Posts

Leave a Comment