உங்களது பிரைவசி பாதிக்கப்படாது- வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம்

by Lifestyle Editor
0 comment

இன்றைய சூழலில் வாட்ஸ் அப் அனைவரும் உபயோகபடுத்தும் ஒரு அப்ளிகேஷனாக மாறிவிட்டது எனலாம்.

பேஸ்புக் நிறுவனம் கடந்த வருடம் வாட்ஸ் அப்பை வாங்கியது. இதன் பிறகு வாட்ஸ்அப்பில் பல்வேறு சேவைகள் புதிதாக கொண்டுவரப்படுகின்றன.

வாட்ஸ்அப் மூலமாக பண பரிவர்த்தனை செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு “WhatApp is updating its terms and privacy policy,” என்ற நோட்டிபிகேஷனால் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.

தனிநபர் தகவலை பெறுவதற்கான புதிய கொள்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

  • தனி நபரின் செல்போன் விவரங்கள், இருப்பிட முகவரி, பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படாது.
  • உங்களது மேசேஜ்கள், உங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் பேசும் அழைப்புகளையும் வாட்ஸ் அப் பேஸ்புக் நிச்சயம் கண்காணிக்காது.
  • எது பரிமாறப்பட்டாலும் அது உங்களுக்குள்ளானது மட்டுமே. அது உங்களுக்குள்ளேயே இருக்கும். end-to-end encryption முறையில் இருப்பதால் உங்கள் தகவல் பரிமாற்றத்துக்குள் யாராலும் தலையிட முடியாது.
  • உங்கள் இருப்பிட தகவலை நீங்கள் யாரிடமாவது பகிர்ந்துகொண்டால், அது பாதுகாப்பாகவே இருக்கும். நீங்கள் அனுப்பிய நபரைத் தவிர வேறு யாருக்கும் உங்கள் இருப்பிட தகவல் செல்லாது
  • உங்களது காண்டக்டில் உள்ள செல்போன் எண்களை ஃபேஸ்புக்குடன் நாங்கள் பகிர்ந்துகொள்ள மாட்டோம். உங்களது குரூப் மெசேஜ்களும் பாதுகாப்பானதாகவே இருக்கும்.
  • உங்களது தகவல்களை நாங்கள் விளம்பர நோக்கத்திற்காக ஃபேஸ்புக்கிற்கு கொடுக்க மாட்டோம்.
  • எங்களுக்கு கோரிக்கை விடுத்தால் உங்களது வாட்ஸ் அப் விவரங்களை நாங்கள் உங்களுக்கு அனுப்புவோம். அந்த தகவல்களை தேவையானால் நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம் அல்லது டெலிட் செய்து கொள்ளலாம்.

Related Posts

Leave a Comment