கொரோனாவை தடுக்க ஜேர்மனியில் கடுமையான ஊரடங்கு இதுவரை நீடிக்கும்! கசிந்தது எம்.பி-க்களிடம் அதிபர் மெர்க்கல் கூறிய தகவல்

by Lifestyle Editor
0 comment

கொரோனா ஊரடங்கு தொடர்பில் எம்.பி-க்களிடம் ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறிய தகவல் கசிந்துள்ளது.

ஜேர்மனியில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு நடைப்பெற்று வருகிறது.

ஜேர்மனியில் தற்போது வரை 19,44,681 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 41,806 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா பரவலை தடுக்க ஏப்ரல் மாதம் ஆரம்பம் வரை ஊரடங்கு நீடிக்க வேண்டும் என தனது கன்சர்வேடிவ் எம்.பி-க்களுடனான சந்திப்பில் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாக அந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஒரு எம்.பி-யை மேற்கோள்காட்டி ஜேர்மன் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பிரிட்டிஷ் வைரஸை நாம் கட்டுப்படுத்தவில்லை என்றால், ஈஸ்டர் பண்டிகைக்கு அதாவது ஏப்ரல் மாதம் 10 மடங்கு அதிகமாக தொற்றுகள் ஏற்படும்.

அதனால், இன்னும் எட்டு முதல் 10 வாரங்கள் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்று கூட்டத்தில் மெர்க்கல் கூறியதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment