அமெரிக்காவில் பூங்காவில் 2 கொரில்லாகளுக்கு கொரோனா பாதிப்பு

by Lifestyle Editor
0 comment

வாஷிங்டன்:

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து இருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்ககானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் 2 கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான்டிகோவில் உள்ள விலங்குகளுக்கான பூங்காவில் பொது மக்கள் செல்ல கடந்த டிசம்பர் 6-ந் தேதி தடை விதிக்கப்பட்டது.

இந்தநிலையில் பூங்காவில் உள்ள 2 கொரில்லா குரங்குகளுக்கு கடந்த வாரம் இருமல் ஏற்பட்டது. இதையடுத்து கொரில்லா குரங்குகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு குரங்குகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அறிகுறி இல்லாத பூங்கா ஊழியர்களிடம் இருந்து கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. முதல்முறையாக கொரில்லா குரங்குகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment