“பஸ்ஸோட பின் சீட்டுக்கு போங்க மேடம்.” -கிளீனர் பேச்சை நம்பி போன பெண்ணுக்கு சொகுசு பேருந்தில் இரண்டு முறை …

by Web Team
0 comment

ஒரு பேருந்தில் தனியாக போன பெண்ணை, அந்த பேருந்தில் பந்த பஸ்ஸின் கிளீனர் பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது .

மகாராஷ்டிராவின் வாஷிம் நகரில் ‘குட் வில்‘ ட்ராவல்ஸ் என்ற ஒரு சொகுசு பேருந்து நிறுவனம் உள்ளது .இந்த ட்ராவல்ஸ் நிறுவனம் நாக்பூரிலிருந்து புனேவுக்குச் பயணிகளை ஏற்றி செல்கிறது .இந்த சொகுசு பேருந்தில் கடந்த வாரம் இரவு ஒரு பெண் தனியாக பயணம் செய்தார் .அப்போது அந்த பேருந்தில் அந்த பெண்ணை தவிர வேறு யாரும் பயணிக்கவில்லை .அப்போது நள்ளிரவு நேரத்தில் அந்த பேருந்து ஒரு இருட்டான பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது அந்த பேருந்தின் கிளீனர் வந்தார் , அப்போது அந்த கிளீனர் அந்த பெண் பயணியிடம் ,ஐந்தாம் எண் சீட்டிலிருந்து , 15 ம் எண் சீட்டிற்கு போகுமாறு கூறினார் .அந்த பெண் எதற்கு என்று கேட்ட போது பஸ்ஸில் பயணிகள் இல்லாததால் பின் சீட்டிற்கு சென்றால் பஸ் குலுங்காது என்று பல சாக்கு போக்கு சொல்லி அனுப்பினார் .அவரின் பேச்சை நம்பிய அந்த பெண் பஸ்ஸின் பின் இருக்கைக்கு சென்றார் .அந்த இரவு நேரத்தில் டிரைவர் பஸ்ஸை ஓட்டிகொண்டிருந்தார் .கண்டக்டர் தூங்கிக்கொண்டிருந்தார் .அந்த நேரத்தில் அந்த பேருந்தில் பயணம் செய்த பெண்ணிடம் சென்ற அந்த கிளீனர் அவரை தாக்கி இருமுறை பாலியல் பலாத்காரம் செய்தார் .அப்போது அந்த பெண் கத்த முயற்சித்தபோது, அவரை பஸ்ஸிலிருந்து தூக்கி வீசி விடுவதாக கிளீனர் மிரட்டினார் ,அதனால் பயந்து போன அந்த பெண் யாரிடமும் இந்த விஷயத்தை கூறாமல் பஸ்ஸிலிருந்து இறங்கினார் . அதன் பிறகு அங்கிருந்து நேராக காவல் நிலையம் சென்று அந்த கிளீனர் தன்னை பலாத்காரம் செய்த கொடுமையை கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பேருந்தின் க்ளீனரை கைது செய்தார்கள் .அதன் பிறகு அந்த பேருந்தும் போலீசால் கைப்பற்றப்பட்டது .

Related Posts

Leave a Comment