கொரோனா தடுப்பூசி விலை எவ்வளவு? வெளியான முக்கிய தகவல்

by Lifestyle Editor
0 comment

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கான விலை எவ்வளவு என்பது குறித்து சீரம் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவின் பாரத் பயோடெக் உருவாக்கிய Covaxin உடன் கொரோனா வைரஸுக்கு எதிரான Oxford-AstraZeneca தடுப்பூசி Covishield-ம் அவசரகால பயன்பாட்டிற்காக பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், மத்திய அரசாங்கத்துடன் விலை ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர், சீரம் நிறுவனம் தயாரிக்கும் Covishield கொரோனா தடுப்பூசிக்கான ஒரு டோஸ் ரூ.200-க்கு கிடைக்கும் என நிறுவன வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

முதல் 100 மில்லியன் டோஸுக்கு விலை ரூ.200 என நிர்ணயிக்கப்படும், Covishield மருந்துகளை அனுப்பும் பணி நாளை காலை முதல் தொடங்கும்.

முதற்கட்டமாக இந்தியாவுக்கு 11 மில்லியன் டோஸ் வழங்கவுள்ளதாக சீரம் நிறுவனம் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Related Posts

Leave a Comment