அடர்த்தியான புருவம் வேண்டுமா?

by Lifestyle Editor
0 comment

பொதுவாக முகத்திற்கு அழகு சேர்ப்பது விழிகள் மட்டும் அல்ல. அதில் புருவத்திற்கும் அதிக இடமுண்டு.

ஆனால் இப்போது உள்ள பெண்களுக்கு அடர்த்தியான, கருமையான புருவம் என்பது இருப்பதில்லை.

இப்படி பட்டவர்கள் புருவம் அடர்த்தியாக வளர கொஞ்சம் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கினாலே போது அடர்த்தியான அழகான புருவத்தை வளர்த்து விடலாம்.

அதற்கு சில வீட்டில் இருக்கும் பொருட்கள் பெரிதும் உதவாக இருக்கின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • தினமும் விளக்கெண்ணெய் கொண்டு இரவு மசாஜ் செய்துவிட்டு அப்படியே படுத்துவிடுங்கள். முடி அடர்த்தியாக வளரும்.
  • தேங்காய் எண்ணெய் புருவங்களுக்கு வறட்சி இல்லாமல் எண்ணெய் பதம் அளிக்கும். இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே தேங்காய் எண்ணெயை தடவி 30 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள்.
  • ஆலிவ் எண்ணெய் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் ஏ சத்து நிறைவாக உள்ளது. எண்ணெயை புருவத்தில் மசாஜ் செய்து 2 மணி நேரம் ஊற வைத்து பின் கழுவிவிடுங்கள்.
  • வெங்காய சாறில் இருக்கும் சல்ஃபர், செலினியம், மினரல், வைட்டமின் பி மற்றும் சி முடி வளர்ச்சியை அதிகரிக்கும். எனவே அதன் சாறை புருவத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்யுங்கள். 1 மணி நேரம் கழித்து கழுவுங்கள்.
  • கற்றாழையும் முடி வளர்ச்சியை தூண்ட உதவும். எனவே அதன் சதையை எடுத்து புருவத்தில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள்.

Related Posts

Leave a Comment