ஐபோன் எஸ்இ, ஏர்பாட்ஸ் ப்ரோ 2 வெளியீட்டு விவரம்! இணையத்தில் வெளியான தகவல்

by Lifestyle Editor
0 comment

ஆப்பிள் நிறுவனம் 2021 ஐபோன் எஸ்இ மற்றும் புதிய ஏர்பாட்ஸ் ப்ரோ 2 மாடல்களை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஜப்பான் நாட்டு வலைதளம் ஒன்றில் இருந்து வெளியாகியுள்ளது.

இருப்பினும் இம்முறை வெளியீடு தவிர இரு சாதனங்கள் பற்றி எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், இரு சாதனங்கள் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

அதில் புதிய ஐபோன் எஸ்இ வெளியானது முதல் இதற்கான பிளஸ் வேரியண்ட் ஐபோன் 8 பிளஸ் தோற்றத்தில் வெளியாகும் என பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

ஆப்பிள் சார்பில் வெளியீட்டு குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts

Leave a Comment