சத்குருவை சந்தித்துவிட்டு வந்து இப்படி ஒரு பதிவினை போட்ட சமந்தா..

by Lifestyle Editor
0 comment

திருமணத்திற்கு பிறகும் தமிழிலும் தெலூங்கிலும் பிஸியான நடிகையாக இருக்கிறார் சமந்தா.

அண்மையில் அவர் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், ஆன்மீக செயல்முறையின் முழு பயிற்சி என்பது நீங்கள் உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து மகத்தான அனுபவத்தை அனுபவிப்பதே ஆகும் என்றும், ஆன்மீகத்தின் நோக்கம் என்பது உங்கள் அறியாமையின் விளைவாக நீங்கள் உருவாக்கி வரையறுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து உங்களை நீங்களே உருவாக்கிக் கொண்டு வாழ்வதுதான் முற்றிலும் ஆனந்தமான ஒரு எல்லையற்ற பொறுப்பு என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும், அறிவொளி என்பது ஒரு சாதனை அல்லது சாதனையேஅல்ல. உங்களது புலன்கள் அனைத்தும் ஒரு வெளிப்புற தோற்றத்தை தருகின்றன. ஆனால் உண்மையான வெளிப்புறத்தை நீங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும்போது நீங்கள் உண்மையாகவே அறிவொளியைப் பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம் என்று பதிவிட்டிருக்கிறார்.

சத்குருவை பார்த்துவந்ததோடு அல்லாமல், இப்படி ஒரு பதிவினையும் போட்ட சமந்தாவை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

Related Posts

Leave a Comment