சிட்னி மைதானத்தில் ‘பிக் பாஸ்’ ஆரி ரசிகர்கள் செய்த நெகிழ்ச்சி செயல்

by Web Team
0 comment

சிட்னி மைதானத்தில் “பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்… கடவுள் இருக்கான் குமாரு” என அவரது ரசிகர்கள் பதாகையால் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

பிக் பாஸ் 4 வது சீசனில் பங்கேற்ற 16 போட்டியாளர்களில் தற்போது ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ, கேபி ஆகிய 6 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இவர்களில் ஆரி தான் பிக்பாஸ் டைட்டிலை ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் “பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்… கடவுள் இருக்கான் குமாரு” என்ற வசனங்கள் அடங்கிய பதாகையுடன் ஆரி ரசிகர்கள் போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment