அண்ணாமலையாரை வழிபட்ட “மாஸ்டர்”படக்குழு

by Lifestyle Editor
0 comment

மாஸ்டர் திரைப்படம் வெற்றியடைய படக்குழு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இதில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனாவால் தள்ளிப்போனது. தற்போது துவண்டு கிடக்கும் திரையுலகையும், ரசிகர்களுக்கும் புத்துயிர் கொடுக்கும் படி மாஸ்டர் படம் வரும் 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளிவரவுள்ளது.

இந்நிலையில் கொரோனா காலத்திற்கு பிறகு தமிழில் வெளியாகும் முதல் பெரிய நடிகரின் திரைப்படம் என்பதால் மாஸ்டர் படக்குழு திரைப்படம் வெற்றிபெற வேண்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்றுள்ளனர். இந்த பயணத்தில் இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் ரத்னா, விஜயின் மேலாளர் ஜெகதீஷ், நடிகர் அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். இதற்கான புகைப்படங்களை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாஸ்டர் படக்குழு வேண்டுகோளுக்கு இணங்க 100% ரசிகர்களை தியேட்டரில் அனுமதிக்க அரசு அனுமதியளித்த நிலையில், இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதனால் 100% இருக்கைக்கு அனுமதி என்று அறிவிப்பை திரும்ப பெற்ற தமிழக அரசு, 50% இருக்கைக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Related Posts

Leave a Comment