“ரஜினி மரணத்தோடு மங்காத்தா ஆடுவார்; சாவோடு சடுகுடு ஆடுவார்”

by Lifestyle Editor
0 comment

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலுயுறுத்தி ரஜினி ரசிகர்கள் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தான் அரசியலுக்கு வர இருப்பதாக ரஜினி அறிவித்தார்.

இதன்பிறகு அவரது பணிகளில் சுணக்கம் ஏற்பட கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ரஜினி, ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்று அறிவித்தார்.இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக இருந்தனர். ஒருபுறம் கட்சி பணிகள், மக்கள் மன்ற பணிகள் என தீவிரமாக செயல்பட தொடங்கினர்.

இதை தொடர்ந்து ரஜினிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஹைதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ரஜினி , சென்னைக்குத் திரும்பியதும் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ரஜினியின் இந்த அறிவிப்பு பலருக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினி ரசிகர்கள் அமைதி வழியில் அறவழிப் போராட்டம் நடத்திவருகின்றனர். அரசியலுக்கு வா தலைவா …, அரசியலுக்கு வாங்கக் ரஜினி என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இயக்குநரும் ரஜினியின் தீவிர ரசிகருமான பிரவீன்காந்த், ” ரஜினிக்கு உயிர் பயமெல்லாம் இல்லை. ரஜினி மரணத்தோடு மங்காத்தா ஆடுவார்; சாவோடு சடுகுடு ஆடுவார்; எமன லெமன் மாதிரி புழிஞ்சு வீசுவார் ரஜினி ” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.இதைக்கண்ட நெட்டிசன்கள் பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment