கர்ப்பகாலத்தில் கர்ப்பிணிகள் இந்த மூன்று பழங்களை நிச்சயம் தவிர்த்துவிடுங்கள்..

by Lifestyle Editor
0 comment

பொதுவாக கர்ப்பிணிகள் கர்ப்பக்காலத்தில் மிகவும் அவதானமாகவும், கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

அதிலும் உணவு தொடர்ப்பாக விஷயத்தில் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் கர்ப்ப காலத்தில் தாய்க்கும், சேய்க்கும் பாக்டீரியாக்களால் தொந்தரவு நேரும். அவை உணவு மூலம் பரவும் நோய்த் தொற்றை ஏற்படுத்தும்.

அதிலும் கர்ப்பிணி பெண்கள் பழங்கள் சாப்பிடுவதில் கட்டுப்பாட்டை பின்பற்றுவது அவசியமானது. ஏனெனில் சில பழங்கள் கூட குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

அந்தவகையில் கர்ப்பிணிகள் எடுத்து கொள்ளக்கூடாதா பழங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

திராட்சைப்பழம்

திராட்சை செடிகளில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை அதற்கு காரணமாக கூறுகிறார்கள். மேலும் திராட்சையில் ரெஸ்வெராட்ரோல் எனும் ரசாயனம் அதிக அளவு இருக்கிறது.

இந்த ரசாயனம் நச்சுத்தன்மை கொண்டது. அது தாய்க்கும், சேய்க்கும் தொந்தரவு உண்டாக்கும். திராட்சையில் வைட்டமின் ஏ, சி போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.

என்றாலும் கர்ப்பகாலத்தில் திராட்சை பழம் சாப்பிடுவதாக இருந்தால் மருத்துவர்களை கலந்தாலோசிப்பது நல்லது.

அன்னாசிப்பழம்

கர்ப்ப காலத்தில் அன்னாசிப்பழம் சாப்பிடுவதும் நல்லதல்ல. அதில் ப்ரோமைலின் நிறைந்துள்ளது. இது கர்ப்பப்பை வாய் செயல்பாட்டுக்கு இடையூறு விளைவிக்கக்கூடியது.

கர்ப்பம் தரித்ததும் முதல் மூன்று மாதங்களில் அன்னாசி பழத்தை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. அன்னாச்சி பழ சாறு பருகினால் உடலில் ஆற்றல் அதிகரிக்கும் என்றாலும் கர்ப்பகாலத்தில் தவிர்ப்பதே நல்லது.

பப்பாளி பழம்

பப்பாளி சாப்பிடுவது கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பது ஓரளவு உண்மையானதுதான்.

பப்பாளி காய் மற்றும் பாதி பழுத்திருக்கும் பழத்தில் லேடெக்ஸில் நிறைந்திருக்கும். அது கருப்பை சுருக்கங்களை தூண்டும். அதனால் பப்பாளியை தவிர்ப்பது நல்லது.

Related Posts

Leave a Comment