பூண்டுப் பாலில் உள்ள மருத்துவக் குணங்கள்

by Lifestyle Editor
0 comment

“பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்“ என்று கிராமப்புறங்களில் சொல்வர். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தையின் உணவில் பூண்டினை சேர்த்து கொள்வதன் பயன் பற்றி சொல்லுவதை நீங்கள் கேட்டிருக்கலாம்.

பூண்டில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் இதை நாம் தினமும் உணவில் சேர்த்து கொள்வது அவசியம். இதனை சாப்பிடுவதால் செரிமான பிரச்சனை நீங்கும்.. பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் உணவின் சுவையை மேம்படுத்தும் மற்றும் ஊட்டச்சத்தை பல மடங்கு அதிகரிக்கும். .

மருத்துவ குணங்கள் நிரம்பிய உணவுப் பொருட்களை நம்முடைய அன்றாட சமையலில் பயன்படுத்தக்கூடிய பொருட்களின் குணநலன்களை எல்லாம் தேடிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

சமையலில் பயன்படுத்தக்கூடியவை ஏரளமான மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது என்று சொன்னால் நிச்சயம் அதில் இடம்பெறக்கூடிய ஒரு பொருள் பூண்டு. பூண்டில் ஏரளமான ஆண்ட்டிபயாட்டிக் சக்திகள் இருக்கின்றன.

பூண்டு உட்கொள்ளும் போது பயனுள்ள ஆன்டிபயாடிக்குகள் குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை செய்யும் தற்போதைய செயல்பாட்டை பாதிக்காது.

பூண்டு சாறு உங்கள் குழந்தையின் உணவில் சேர்த்து கொள்ள சிறந்த வடிவமாகும். உங்கள் குழந்தையின் எல்லா குடல் புழுக்களை நீக்க இது உதவும்.

பூண்டுப் பாலில் உள்ள மருத்துவக் குணங்கள் பற்றி பார்ப்போம்

  • இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனைக் காணலாம்.
  • பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து, இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கும்.
  • ரத்த அழுத்த பிரச்சனையை கட்டுப்படுத்தி, ரத்தோட்டத்தை சீராக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனையை குணமாக்குகிறது.
  • மலேரியா, காசநோய், யானைக்கால் நோய் மற்றும் ப்ளேக் போன்ற நோய்களை உண்டாக்கும் கிருமிகளுக்கு எதிராக செயல்படுகிறது.
  • தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும், குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்படும்.
  • நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இந்த பூண்டு கலந்த பாலை குடித்து வந்தால், விரைவில் நுரையீரல் அழற்சியை குணமாக்கலாம்.
  • வறுத்த பூண்டை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் பெரும் மற்றும் செரிமான பிரச்சனை, மலசிக்கல் ஆகியவையில் இருந்து விடிவு பெறலாம்.

குறிப்பு

  • சிலர் காலையில் வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். பூண்டினை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.
  • காலையில் வெறும் வயிற்றில் சாதரண தண்ணீரையோ அல்லது எலுமிச்சை கலந்த தண்ணீரையோ குடிக்கலாம்.
  • காலை உணவுக்குப் பிறகு எடுத்துக் கொள்ளுங்கள். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி, செரிமானக் கோளாறு, வயிற்றுப் போக்கும் வாந்தி ஆகியவை ஏற்படும்.

Related Posts

Leave a Comment