பாகிஸ்தானில் பாரிய மின்தடை

by Lankan Editor
0 comment

பாகிஸ்தானில் நாடு முழுவதும் பாரிய மின்தடையைத் தொடர்ந்து சில பகுதிகளில் மின்சாரம் படிப்படியாக மீட்டெடுக்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நேற்று (சனிக்கிழமை) நள்ளிரவில் இருந்து திடீரென இருளில் மூழ்கின. அத்தோடு மின்சாரம் முழுமையாக மீட்டமைக்க பல மணிநேரம் ஆகலாம் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் மின்தடை என்பது வழக்கத்திற்கு மாறானது இல்லை என்றும் எனவே வைத்தியசாலைகள் போன்ற அத்தியாவசிய இடங்களில் மாற்று வசதிகள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மின்தடையினால் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மின்தடையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் மின்தடைக்கான காரணம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment