பொள்ளாச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற கனிமொழி தடுத்து நிறுத்தம் – சாலையில் அமர்ந்து தர்ணா

by Lifestyle Editor
0 comment

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு சென்ற கனிமொழியை போலீஸ் தடுத்து நிறுத்தினர்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 200ற்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஏற்கனவே 5 பேர் கைதாகி சிறையில் உள்ள நிலையில் சமீபத்தில் அதிமுக நிர்வாகி அருளானந்தம் உள்ளிட்ட மூன்று பேர் சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் 3 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிபிஐ தகவல் தெரிவித்தது.இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று திமுக போராட்டம் அறிவித்தது.

இந்நிலையில் பொள்ளாச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க புறப்பட்டு சென்ற திமுக எம்.பி. கனிமொழி கோவையில் தடுத்து நிறுத்தப்பட்டார். கற்பகம் கல்லூரி அருகே போலீசார் தடுத்து நிறுத்தியதாய் கண்டித்து கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய அனைத்து நபர்களும் கைது செய்ய கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் கனிமொழி எம்.பி. தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment