பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே சென்றதும் என்ன பண்ணுவீங்க.. ஷிவானி – பாலாவின் பதிலால் வாயடைத்து நின்ற கமல்

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருவது வழக்கம்.

அப்படி ஹவுஸ்மேட்ஸ்களை சந்திக்கும் கமல், வாரம் முழுக்க நடக்கும் சம்பவங்கள் குறித்து விசாரித்து அதற்கு பதிலடியும் கொடுப்பார்.

இந்த நிலையில், இந்த வாரம் ஷிவானி தான் வெளியேறிவிட்டதாக உறுதியான தகவல்கள் வெளியான நிலையில், இன்றைக்கான முதல் ப்ரோமோ காட்சியில், கமல் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் முதலில் என்ன செய்வீர்கள் என கேட்கிறார்.

அதற்கு, பதிலளித்த, ஷிவானி எதுவும் யோசிக்கவில்லை என கூற, அடுத்ததாக பாலா கோவா செல்லவேண்டும் என கூறினார். அதன் பின் ரம்யா மசாஜ் செய்யவேண்டும் எனவும் ரியோ வண்டியை எடுத்துட்டு நடுக்காட்டுக்கு செல்லவேண்டும் என கூறினார். இதற்கு கமல் புன்னகையிட்டார்.

Related Posts

Leave a Comment