எந்த நடிகருக்கும் இல்லாத அளவிற்கு ஏறிய மாஸ்டர் படத்தின் டிக்கெட் விலை..

by Lifestyle Editor
0 comment

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகிறது.

உலகம்முழுவதும் வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு காத்துகொண்டு இருக்கிறது.

ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்த்தபடி 100% சதவீத இறக்கைகளுடன் மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் 50% இருக்கை தான் என முடிவாகியுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு திரையரங்கிலும் டிக்கெட் விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.

இதில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் விற்பனை ஆகிவரும் மாஸ்டர் படத்தின் டிக்கெட்டின் விலை ரூ. 500ல் ஆரம்பித்து ரூ. 5000 ஆயிரம் வரை விற்பனை ஆகி வருகிறதாம்.

Related Posts

Leave a Comment