வாழ்வை உயர்த்தும் உயரிய மந்திரம்!

by Lifestyle Editor
0 comment

அம்பிகையைத் தியானித்து வழிபட ஆதிசங்கரரால் அருளப்பட்டது சௌந்தர்யலஹரி. இதில் நூறு மந்திரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் குறிப்பிட்ட பலனைத் தருவதாக உள்ளன.

ஒருவருக்கு முன்னேற்றம் அடைய வாய்ப்பே இல்லை என்றாலும் அவர்களையும் உயர்த்தும் வகையில் மந்திரம் ஒன்றை ஆதிசங்கரர் அருளியுள்ளார். இதைத் தினமும் சொல்லி வருவதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண முடியும்!

மந்திரம்:

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண – ஜநிதானாம்தவ சிவே

பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா

ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே

ஸ்திதா ஹ்யேதே சச்வன் – முகுலித – கரோத்தம்ஸ-மகுடம்

விளக்கம்:

அன்னை பார்வதியே, உன்னுடைய திருவடிகளில் செய்யக் கூடிய பூஜையானது மும்மூர்த்திகளுக்கும் பொருந்தக் கூடியதாக அமைகிறது. மும்மூர்த்திகளும் உன்னுடைய மூன்று குணங்களிலிருந்து தோன்றியவர்கள்தான். எப்போதும் அவர்கள் உன்னுடைய ரத்தின மயமான சிம்மாசனத்துக்கு அருகில், கைகளைக் குவித்தபடி நின்று கொண்டிருக்கிறார்கள். எனவே, உனக்கு பூஜை செய்வது மும்மூர்த்திகளுக்கும் சேர்த்து பூஜை செய்தது போல் அமைகிறது!

இந்த ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து, தினமும் சொல்லி வருவதன் மூலம் அம்பிகையின் அருளைப் பெற்று வாழ்வில் முன்னேற்றத்தைக் காணலாம்!

Related Posts

Leave a Comment