பயணிகளுடன் மாயமான இந்தோனேசியா விமானத்தின் பாகங்கள் நடுக்கடலில் கண்டுபிடிப்பு! வெளியான வீடியோ

by Lifestyle Editor
0 comment

இந்தோனேசியாவில் காணாமல் போன பயணிகளின் பாகங்கள் கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Jakarta-விலிருந்து 50-க்கும் மேற்பட்டவர்களுடன் Pontianak புறப்பட்ட Sriwijaya Air flight SJ182 போயிங் விமானம், சிறிது நேரத்திலேயே விமான போக்குவரத்து அதிகாரிகளுடனான தொடர்பை இழந்து ரேடாரிலிருந்து மாயமானது.

விமானத்தில் 46 பெரியவர்கள், ஏழு குழந்தைகள், மூன்று கைக்குழந்தைகள் மற்றும் ஆறு குழு உறுப்பினர்கள் இருந்ததாக போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரவித்துள்ளது.

இதனையடுத்து, விமானம் தொடர்பை இழந்த கடல் பகுதியில் இந்தோனேசியா அவசர மற்றும் மீட்பு சேவையினர் கப்பல் தேடுதல் பணியை தொடங்கினர்.

ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தின் பாகங்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். மீட்புக்குழுவினர் விமான பாகங்களை கண்டுபிடித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், ஜகார்த்தா விரிகுடாவில் விமானத்தில் பயணித்தவர்களை தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளதாக மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment