புத்தாண்டு பரிசு கேட்ட காதலி.. கொலை செய்த காதலன்

by Lifestyle Editor
0 comment

திண்டுக்கல் மாவட்டத்தின் தொப்பம்பட்டி சாலை அருகே இருந்த முட்புதரில் கடந்த 5ம் தேதி அன்று இளம்பெண்ணிடன் சடலத்தை கண்டு அப்பகுதியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனேபோலீசுக்கு தகவல் கொடுக்கவும், அவர்கள் வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் அந்த இளம்பெண் ஜெயஸ்ரீ என்றும், வடமதுரை அருகே தென்னம்படியை சேர்ந்தவர் என்றும்தெரியவந்தது. பின்னர் அப்பெண்ணுக்கு வந்த போன்கால்கள் மூலமாக போலீசார் விசாரித்து வந்ததில், தங்கதுரை என்ற இளைஞன் சிக்கினான். அவன் போனுக்குத்தான் ஜெயஸ்ரீ கடைசியாக பேசி இருந்தார்.

வேடசந்தூர் அருகே விருதலைப்பட்டியில் உள்ள தனியார் மில்லியில் ஜெயஸ்ரீயும் தங்கதுரையும் வேலை பார்த்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியிருக்கிறது,

இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி ஜெயஸ்ரீ கேட்டு வந்திருக்கிறார்.

கடந்த புத்தாண்டு தினத்தில் கடைக்கு சென்றுவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு தங்கதுரையுடன் சென்றிருக்கிறார். அப்போதும் தன்னை திருமணம் செய்துகொள்ள ஜெயஸ்ரீ கேட்டதாகவும், புத்தாண்டு பரிசாக திருமணம் கேட்டிருக்கிறார். இதனால் நண்பன் ஜெகநாதனை அழைத்து வந்து அவன் உதவியுடன் ஜெயஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறான். பின்னர் உடலை சாலை ஓரம் புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டார்.

விசாரணைக்கு பின்னர் தங்கதுரையும், ஜெகநாதனும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Posts

Leave a Comment