பிக் பாஸ் ஆரி ஆர்மி செய்வதும் அர்ச்சனா செய்த குருப்பிஸமும் ஒன்றுதானா?

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 இன்னும் ஒரு வாரத்தில் முடியபோகிறது. யார் வெல்லப்போகிறார் என்பது குறித்த விவாதம் சமூக ஊடகத்தில் காரசாரமாக போய்க்கொண்டிருக்கிறது.

முதல் சீசனில் ஓவியாவுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அடுத்து மூன்றாம் சீசனில் சாண்டி அண்ட் குருப்க்கு சமூக ஊடகத்தில் நல்ல ஆதரவு கிடைத்தது. இந்த சீசனில் கலந்துகொண்டுள்ள ஆரியைப் பற்றி சமூக ஊடகங்களில் பேச்சு இருக்கிறது. ஆரி ஆர்மி எனும் பெயரில் பல பக்கங்கள் தொடங்கப்பட்டு ஆரிக்கு ஆதரவான கருத்துகள் பதியப்படுகின்றன. ட்ரெண்ட்டாக்கப் படுகின்றன.

உண்மையில் ஆரியின் ரோல் பிக்பாஸ் வீட்டில் என்ன? அவர் அதிக டாஸ்க்குகளை வென்றது இல்லை. மாறாக, தன்னைச் சுற்றி பிக்பாஸ் வீட்டின் பேச்சு அமையும்படி பார்த்துக்கொள்கிறார். சண்டையும் வாக்கு வாதமும்தான் பிக்பாஸ் வீட்டின் கண்டண்ட் என்பதை ஒரு நொடியும் மறக்காது அதற்கான வாய்ப்புகளைத் தேடுகிறார். சில நேரங்களில் அவர் கூறும் கருத்துகள் போட்டியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பயனுள்ளதாகவே இருக்கின்றன.

ஆரி பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா அண்ட் கோவின் அன்பையும் லவ் பெட் குருப்பையும் எப்போதும் எதிர்த்தார். அப்போது அவரோடு பாலாவும் சேர்ந்துகொண்டார். இவர்களின் கருத்து என்னவென்றால், அர்ச்சனா குருப்பில் இருக்கும் 6 அல்லது 7 பேருக்குள் நாமினேஷன் சொல்லிக்கொள்ள மாட்டார்கள். அதனால், தனித்து ஆடுபவர்கள் பலிகடாவாக்கி வெளியே அனுப்பப்படுவார்கள். இருவரும் அப்படி நினைத்து, கவலை பட ஒரு காரணம், இருவரும் தனித்து ஆடுபவர்கள்.

இந்த காரணத்தைச் சொல்லியே ரசிகர்களிடம் அர்ச்சனா அண்ட் கோ பற்றிய எதிர்பிம்பத்தைச் சித்திரித்து விட்டார். அப்படி பழகிய ஆரியின் ரசிகர்கள் அர்ச்சனா அண்ட் கோவுக்கு எதிராக கமெண்ட் செய்யத் தொடங்கினார்கள். ஆரிக்கு ஓட்டு போட்டுவது என்பது மட்டுமல்லாமல், அர்ச்சனா அண்ட் கோ வில் இருப்பவர்களுக்கு ஓட்டு விழாமல் பார்த்துக்கொண்டார்கள். அதாவது அர்ச்சனா அண்ட் கோவினரைத் தவிர மற்றவர்களுக்கு ஓட்டுகளை நிரந்து போடுவது. அதனால்தான் ஜித்தன் ரமேஷ், நிஷா இருவரும் ஒரே வாரத்தில் வெளியேறினார்கள்.

இப்படி தன் ரசிகர்களை கேமரா வழியே பேசிப் பேசி வளர்த்த ஆரியின் செயல் இன்று வேறொரு வடிவத்திற்கு மாறிவிட்டது. அதாவது தனித்து ஆடுபவர்கள் பலிகடா ஆகக்கூடாது என்பது மாறி, ஆரியை எதிர்த்துபேசுபவர்கள்… ஆரியிடம் வாக்கு வாதம் செய்பவர்கள்… ஆரியை நாமினேஷன் செய்பவர்கள்… இவர்களை எல்லாம் போட்டியிலிருந்து எவிக்‌ஷன் செய்ய, மற்றவர்களுக்கு வாக்குகளைப் பிரித்து போட ஆரம்பித்தனர் ஆரியின் ரசிகர்கள்.

அதாவது அர்ச்சனா தன் குருப் உறுப்பினர்கள் மீது பாசத்தால் நாமினேஷன் செய்ய வில்லை என்ற குற்றச்சாட்டை இன்று ஆரி ஆர்மி மீது வைக்கலாம். ஏனெனில், ஆரி மீதான பாசத்தால் அவரை எதிர்ப்பவர்களை எல்லாம் வெளியேற்ற துடிக்கிறார்கள்.

இதற்கு நல்ல உதாரணம், அனிதாவின் எவிக்‌ஷன். அனிதா தனித்து இந்த விளையாட்டை ஆடுபவர். தம் கருத்துகளை வெளிப்படையாக முன் வைப்பவர். ஆனால், அவர் ஆரியை எதிர்த்து பேசிவிட்டார் என்பதால் குறி வைத்து அவரை சமூக ஊடகங்களில் தாக்கினார்கள். கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில்கூட ‘அனிதாவை வெளியேற்றுங்க’ என்று ஆரியின் ரசிகர்கள் குரல் கொடுத்தார்கள்.

அடுத்து ஆரி தனக்கு இறுதிப்போட்டியில் இடையூறாக இருப்பார்கள் என நினைக்கும் ரியோ, ரம்யா, பாலா ஆகியோரை குறித்து விமர்சனம் செய்கிறார். அதனால், அவர்கள் எதிர்த்து பேசுகிறார்கள். ஆனால், அதைப் பார்க்கும் ஆரி ஆர்மி அவர்களை வெளியேற்றவும் ட்ரோல் செய்ய தீவிரமாக உழைக்கிறார்கள். சென்ற வாரம் ரம்யா தப்பியது ஒரு நூலிழையில்தான்.

இவற்றையெல்லாம் பார்க்கையில் ஆரி மீது ஆரி ஆர்மி வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடும், அர்ச்சனா குருப்பிஸம் செய்ததாக நினைத்து ஆரி சொன்ன காரணமும் ஒன்றாகவே இருக்கிறது.

Related Posts

Leave a Comment