பிக்பாஸ் நிகழ்ச்சியானது 95 நாட்களை கடந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.
இதில், டிக்கெட் பினாலே டாஸ்கில் போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி கொண்டிருக்கிறார்கள். இதுவரை நடத்தப்பட்ட போட்டியில், ரியோ மற்றும் சோம் அதிக புள்ளிகளுடன் முதலிடத்திலும், அடுத்தடுத்த இடத்தில், ரம்யா பாண்டியன், ஷிவானியும் இடம்பெற்றுள்ளனர்.
மக்களின் நாயகனான ஆரி ஐந்தாவது இடத்தில் இடம்பிடித்துவருகிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அட இந்த வாரம் யாரு செல்வார்கள் என ரசிகர்கள் எதிர்பாத்த நிலையில், வாக்குகளிடன் அடிப்படையில், ஆரி முதலிடத்திலும், பாலா இரண்டாவது இடமும், ரியோ மற்றும் சோம் அடுத்தடுத்த இடம்பெற, ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி தான் கடை இடத்தில் உள்ளனர்.
ஒரு வேளை இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருந்தால் கண்டிப்பாக ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இல்லை என்றால் எந்தவித சந்தேகமின்றி ஷிவானி தாம் வெளியேற்றப்படுவார்.