பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நாளொன்றில் பதிவான அதிகளவான உயிரிழப்பு

by Lankan Editor
0 comment

பிரித்தானியாவில் நாளொன்றில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 52ஆயிரத்து 618பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர ஆயிரத்து 162பேர் உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஆயிரத்து 166பேர் உயிரிழந்ததே பிரித்தானியாவில் பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச உயிரிழப்பு எண்ணிக்கையாகும்.

உலக அளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட 5ஆவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில் இதுவரை வைரஸ் தொற்றினால், 28இலட்சத்து 89ஆயிரத்து 419பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை பிரித்தானியாவில் 78 ஆயிரத்து 508பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 14 இலட்சத்து 46 ஆயிரத்து 90பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 64ஆயிரத்து 821பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related Posts

Leave a Comment