நடிகர் விஜய் வீட்டில் வாடகைக்கு இருப்பவரை காலி செய்யக்கோரி போலீஸில் புகார்

by Web Team
0 comment

தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு இருந்து வரும் 2 பேரை காலி செய்து தரும்படி நடிகர் விஜய் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தில் அகில இந்திய செயலாளராக இருந்து வந்த ரவிராஜா, துணைச் செயலாளராக பதவி வகித்த ஏ.சி.குமார் ஆகியோர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அதன் இயக்க பொறுப்பாளர் ஆனந்த் அறிவித்திருந்தார்.

இவர்கள் இருவரும் சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் அவர்களிடம், நடிகர் விஜய் வீட்டை விட்டு காலிசெய்யுமாறு கூறியுள்ளார்.

ஆனால், அவர்கள் அறையை காலிசெய்யாமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் விருகம்பாக்கம் காவல்நிலையத்தில், அவர்களை காலிசெய்து தரும்படி புகார் அளித்துள்ளார்.

விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment