தேவைப்பட்டால் டிரம்பின் சமூகவலைதளம் நிரந்தரமாக முடக்கப்படும்- மார்க் ஜுக்கர் பெர்க் அதிரடி

by Web Team
0 comment

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பேஸ்புக் கணக்கை காலவரையின்றி மூடலாம் என பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு பெரும் கலவரம் நடத்தினர் டிரம்ப் ஆதரவாளர்கள். ஒரு வழியாக பல மணி நேரத்திற்கு பிறகு, கலவரக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து வன்முறையை தூண்ட தங்கள் தளங்களை டிரம்ப் பயன்படுத்துவதாக கூறி பேஸ்புக், அதன் துணை நிறுவனமான இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் ஆகியவை டிரம்ப் அக்கவுண்ட்டை முடக்கி வைத்துள்ளன.

இந்த நிலையில் மார்க் ஜுக்கர்பெர்க் தனது பதிவில். இந்த காலகட்டத்தில் அதிபர் எங்கள் சேவையை தொடர்ந்து பயன்படுத்த அனுமதிப்பதால் ஏற்படும் அபாயங்கள் மிகப் பெரியவை என்று நாங்கள் நம்புகிறோம் எனகூறியுள்ளார்.

இதனால், பேஸ்புக்,டுவிட்டர் டிரம்பின் கணக்கை நிரந்தரமாக முடக்க வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பை அந்தநாட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment