அமெரிக்க செனட் சபையில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் நால்வர் உயிரிழப்பு

by Lankan Editor
0 comment

அமெரிக்க செனட் சபை அமைந்துள்ள கெப்பிட்டல் ஹில் கட்டட தொகுதியில் நேற்று இடம்பெற்ற கலவரத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள், செனட் சபையின் கெப்பிட்டல் ஹில் கட்டட தொகுதிக்குள் அத்துமீறி பிரவேசித்ததை அடுத்து, இடம்பெற்ற கலவர சம்பவத்திலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, அமெரிக்காவின் வொஷிங்டன் டிசியில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment