இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுகின்றனரா?

by Lifestyle Editor
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக இறுதி போட்டியை நோக்கி நகர்ந்து வருகிறது, மேலும் இந்த முறை யார் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போகிறார் என எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பைனல்ஸ் டாஸ்க் நடந்து வருகிறது, இதில் அதிக புள்ளிகளோடு ரியோ முன்னிலையில் உள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த வாரம் எந்த போட்டியாளர் பிக்பாஸ் போட்டியை விட்டு வெளியேற போகின்றனர், என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் எப்போதும் போல ஆரி அதிக வாக்குகள் பெற்றுள்ளார், அவரை தொடர்ந்து பாலா மற்றும் ரியோ, அதன் பின் கேபி மற்றும் சோம் சேகர் உள்ளனர்.

மேலும் இதில் கடைசி இரண்டு இடங்களில் தான் ரம்யா மற்றும் ஷிவானி உள்ளனர், இந்த வாரம் டபுள் எலிமினேஷனாக இருந்தால் இவர்கள் இருவரும் வெளியேறி விடுவார்கள்.

அப்படி இல்லை என்றால் ஷிவானி தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறுவார் என கூறப்படுகிறது.

Related Posts

Leave a Comment