மாம்பழ ரெசிபி செய்வது எப்படி ?

by Lifestyle Editor
0 comment

தேவையான பொருட்கள்

1 அல்ஃபோன்சோ மாம்பழம்
300 கிராம் சர்க்கரை
1 கிராம் குங்குமப்பூ
250 மி.லி தண்ணீர்
250 மி.லி பால்
100 கிராம் தயிர்
200 கிராம் மைதா
500 கிராம் நெய்

செய்முறை

1. ஈர மாவை உருவாக்க, மைதாவையும் தயிரையும் ஒரு நாள் முன்னதாகவே கலந்து வைக்கவும்.
2. சர்க்கரையை தண்ணீர் சேர்த்து உருக்கி, அதிலிருந்து சிரப்பை உருவாக்கவும், அதில் பாலை சேர்த்து கலக்கவும்.
3. மாம்பழத்தைத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
4. கடாயைச் சூடாக்கி, அதில் நெய்யை முதலில் சூடாக்கவும். மாம்பழ துண்டுகளை ஈரமாவில் தோய்த்தெடுத்து சூடாகி இருக்கும் நெய்யில் பொரித்து எடுக்கவும். பொரித்தவுடன், அதை எடுத்து சர்க்கரை சிரப்பில் ஊறவிடவும். அதை சூடாகவே எடுத்து பரிமாறவும்.

Related Posts

Leave a Comment