தனியார் எஸ்டேட்டில் மனைவி, 2 குழந்தைகளை கொன்று, வடமாநில தொழிலாளி தற்கொலை

by Lifestyle Editor
0 comment

நீலகிரி

குன்னூர் அருகே மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு, வடமாநில கூலி தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த கொலக்கம்பை கிராமத்தின் அருகே கிரேக்மோர் தனியார் எஸ்டேட் உள்ளது. இந்த தேயிலை தோட்டங்களில் தமிழகம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இங்குள்ள 12-வது லைன் குடியிருப்பு பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த அசோக் பகத் என்னும் தொழிலாளி, தனது மனைவி சுமதிகுமாரி, மகன் அபே(8) மற்றும் மகள் ரேஷ்மா(4) ஆகியோருடன் கடந்த 2 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், அசோக் பகத், தனது மனைவி மற்றும் மகனை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, 4 வயது மகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார். அதனை தொடர்ந்து, மனைவியின் சடலத்தின் மீது இந்தியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அளித்த தகவலின் பேரில் கொலக்கம்பை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அசோக் பகத் எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்த வடமாநில தொழிலாளி குடும்பத்தினரை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு, சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment