ஆறு பிள்ளைகளையும் பிரித்தானியாவில் மருத்துவ சேவைக்கு அர்ப்பணித்த இந்தியர் கொரோனாவால் மரணம்!

by Lifestyle Editor
0 comment

தனது பிள்ளைகள் ஆறு பேரையும் பிரித்தானியாவில் மருத்துவப்பணிக்கு அர்ப்பணித்த இந்தியர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.

1950களின்போது, இந்தியா பாகிஸ்தான் பிரிவினை வன்முறைக்குத் தப்பி, தனக்கு 19 வயது இருக்கும்போது பிரித்தானியாவுக்கு வந்தவர் Ahsan-ul-Haq Chaudry (81). தனது மகள் பணிபுரியும் கிழக்கு லண்டன் மருத்துவமனை ஒன்றில் தனது 81ஆவது வயதில் உயிரிழந்த Chaudryக்கு இரங்கல் செய்திகள் குவிகின்றன.

அதற்கு முக்கிய காரணம், தனக்கு வாழ்வளித்த பிரித்தானியாவுக்கு, தனது பிள்ளைகள் ஆறு பேரையும் மருத்துவ சேவைக்கு அர்ப்பணித்ததன் மூலம் தனது நன்றிக்கடனை செலுத்தியுள்ளார் Chaudry என்பதுதான்.

Chaudryயின் பிள்ளைகளில் ஒருவர் தீவிர சிகிச்சைப்பிரிவு மருத்துவராகவும், இரண்டு பேர் பொது மருத்துவர்களாகவும், ஒருவர் ஜூனியர் மருத்துவராகவும் ஒருவர் குழந்தைகள் நல மருத்துவராகவும், மற்றொருவர் மருந்தாளுநராகவும் உள்ளனர்.

தங்கள் தந்தையுடன் செலவிடும் நேரத்தையும் தியாகம் செய்து, மருத்துவப்பணியில் முன்னணியில் களம் இறங்கி கொரோனாவுக்கெதிராக போராடி வந்தனர் பிள்ளைகள் ஆறு பேரும்.

இந்நிலையில், அரசின் விதிமுறைகளை சரியாக பின்பற்றி, தனிமையில் கிழக்கு லண்டனில் பாதுகாப்பான முறையில் இருந்தும், Chaudryக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக டிசம்பர் மாதம் 28ஆம் திகதி, தனது மகள் பணிபுரியும் கிழக்கு லண்டன் மருத்துவமனை ஒன்றிலேயே உயிரிழந்தார் Chaudry. Chaudry, ஒரு கணித மற்றும் கணினி அறிவியல் ஆசிரியராக பணி புரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார்.

Related Posts

Leave a Comment