வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்.. அடுத்த மாதத்தில் இருந்து பயன்படுத்த முடியாதா?

by Web Team
0 comment

பிரபல குறுஞ்செய்தியான வாட்ஸ்அப் செயலியானது அதன் பிரைவசி கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றியமைத்திருக்கிறது.

இது குறித்து, அறிவிப்புகளை அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கு இன்-ஆப் நோட்டிபிகேஷன் மூலம் அனுப்பத் தொடங்கியுள்ளது.

மேலும், பேஸ்புக் வழங்கும் பிற தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் சிறப்பாக ஒருங்கிணைக்க வாட்ஸ்அப் இந்த அப்டேட்டுகளை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.

வாட்ஸ் ஆப் அறிவித்துள்ள புதிய விதி முறைகள் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இதனை ஒரு நோட்டிபிகேஷன் மூலமாக பயனாளர்களின் மொபைல் போனுக்கு அனுப்பும்.

இதனை பயனர்கள் ஏற்றுக்கொளளவிட்டால் உங்கள் அகௌண்ட் டெலீட் செய்யப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், வாட்ஸ்அப் புதிய சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை அடுத்த மாதம் பிப்ரவரி 8 ஆம் தேதி நேரலைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் வாட்ஸ்அப்பின் புதிய விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்க வேண்டும் அப்படி புதிய சேவை விதிமுறைகளை ஏற்க தவறும்பட்சத்தில் பிப்ரவரி 8 முதல் தங்களின் வாட்ஸ்அப் கணக்குகளை பயன்படுத்த முடியாது என கூறப்படுகிறது.

இதனால், வாட்ஸ் அப் பயனாளர்கள் மிகுந்த அச்சத்துடன் என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment