அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை போராட்டத்தில் இந்திய தேசிய கொடி பயன்படுத்தப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து வன்முறையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
அமெரிக்க நாடாளுமன்றமே போர்க்களமாக காட்சியளித்ததுடன் வெள்ளை மாளிகையை சூறையாடினர்.
இப்போராட்டத்தில் மட்டும் நால்வர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இதற்கு உலகத்தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த பரபரப்பான வன்முறையில் இந்திய தேசியக் கொடியும் பறந்துகொண்டிருந்தது தான் தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது.
அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
”ஒரு வன்முறையில், வேறு நாட்டில் இந்திய கொடி பறப்பது இந்தியாவுக்கு அவமானம்”, ”தேசியக் கொடி ஒரு உணர்ச்சிப் பூர்வமான விஷயம். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் அதனை உள்நாட்டு பிரச்னைகளில் ஈடுபடுத்துவது கண்டிக்கத்தக்கது” என பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.