பிரபல தமிழ்ப்பட நடிகைக்கு இன்று இரவில் திடீர் திருமணம்!

by Web Team
0 comment

பிரபல நடிகை கயல் ஆனந்திக்கு திடீரென திருமணம் நடைபெறவுள்ளது.

தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி.

இதைத் தொடர்ந்து கயல் படத்தில் நடித்ததன் மூலம் கயல் ஆனந்தி ஆனார்.

பின்னர், திரிஷா இல்லைனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, சண்டிவீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் என பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில், ஆனந்திக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளதாம்.
இது காதல் திருமணம் அல்ல என்றும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் திருமணம், இன்று இரவு வாராங்கல்லில் நடக்கிறது. இந்த திருமணத்துக்கு, சினிமா உலகை சேர்ந்த யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

Related Posts

Leave a Comment