தேய்பிறை அஷ்டமியொட்டி, ராமநாத சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் பவனி

by Lifestyle Editor
0 comment

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் பவனி வந்தார். இதனையொட்டி, இன்று மாலை ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் ஸ்ரீபர்வத வர்த்தினி ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர்.

அதனை தொடர்ந்து, மேள வாத்தியங்கள் முழங்க கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில், பஞ்ச மூர்த்திகள் உடன் வர சுவாமி பவனி நடைபெற்றது. இதனை ஏராளமான உள்ளூர் பக்தர்களும், வடமாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்களும் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Posts

Leave a Comment