ரம்யா பாலாவுடன் போட்ட ஆட்டம்! நரிப் பாண்டியனின் மாஸ்க்கை கிழித்து வெளுத்து விட்ட நெட்டிசன்கள்! அன்சீன் புரமோவில் அம்பலமான உண்மை

by Lifestyle Editor
0 comment

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோவில் ரம்யாவும் பாலாவும் சந்தோஷமாக நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பாலாவுடன் தான் நட்பாக இல்லை என ஆரியிடம் ரம்யா சொல்லி சண்டையே போட்டார்.

ஆனால், கமல் சார், நீங்க பாலாவுக்குத் தான் ஃபேவரிடிசம் பண்ணுறீங்கன்னு சொல்லி நரி முகத்தை அம்பலப்படுத்தினார்.

யாருடனும் இந்த வீட்டில் தான் நட்பு பாராட்டவில்லை என மறுப்பு தெரிவித்த ரம்ய பாண்டியனிடம், நீங்க ஆரியை விடுத்து பாலாவுக்கு ஃபேவர் பண்ணது போலத்தான் நிகழ்ச்சியை பார்க்கும் போது தெரிந்தது என நரிப் பாண்டியனின் மாஸ்க்கை கிழித்து வெளுத்து விட்டார் என நெட்டிசன்கள் கலாய்த்தனர்.

ஏற்கனவே ஆரியை பற்றி அர்ச்சனா கேங்குடன் இணைந்து ஆரி நீ ஒரு மாறி என பாட்டுப் பாடி சந்தோஷமடைந்த ரம்யா பாண்டியன், மீண்டும் ஆரியை குத்திக் காட்டி பாடுவதை போலவே பாலாவுடன் டான்ஸ் ஆடிக் கொண்டு, இஷ்டத்துக்கு லிரிக்ஸ் போட்டு பாடும் அன்சீன் காட்சி ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

சுசித்ரா இருந்த போது அவருடன் இணைந்து பாடிக் கொண்டிருந்த பாலாஜி முருகதாஸ், அடுத்து, ஆஜீத்துடன் சேர்ந்து பாடி வந்தார்.

இந்நிலையில், தற்போது ரம்யா பாண்டியனுடன் இணைந்து ஆடிப் பாடும் அவர், எந்த பேக்ரவுண்டும் அவங்களுக்கு இல்லை, நல்லவன், கெட்டவன் எவனுமில்லை, எல்லாம் நம்ப பார்க்கும் பார்வையால என ஆரியின் பார்வை தப்பு என்பது போல பாடி ஆடுகின்றனர்.

எடிட்டரும், அந்த நேரத்தில் ஆரியின் ஷாட்டை வைத்து புரமோவிலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்கிறார்.

இதைப் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், அன்சீன் வரைக்கும் விஜய் டிவிக்கு ஆரி போபியா பிடித்து விட்டது.

சீக்கிரமே அவரை வெளியேற்ற முடிவு பண்ணிட்டாங்க, எப்படியும் வெள்ளிக்கிழமை கடந்த வாரத்தை விட பெரிய சண்டையை கிளப்பி ஆரிக்கு அநியாயம் பண்ண போறாங்க என ஏகப்பட்ட ரசிகர்கள் கணித்தும் கண்டித்தும் வருகின்றனர்.

 

Related Posts

Leave a Comment