ரஜினியை சந்திக்க மறுத்த சகாயம்! இரண்டு முறை அழைத்தும் ஏமாற்றம்

by Lifestyle Editor
0 comment

கட்சி தொடங்கினாலும் முதல்வர் வேட்பாளர் நான் இருக்க மாட்டேன் என்று சொல்லிவந்தார் ரஜினிகாந்த். முதல்வர் வேட்பாளராக ஓய்வு பெற்ற அதிகாரி அல்லது இளைஞரைத்தான் முன் நிறுத்துவேன் என்ற முடிவிலும் உறுதியாகவே இருந்தார் ரஜினி என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கொரோனாவுக்கு முன்பு கட்சி தொடங்குவதாக படு வேகம் காட்டி வந்த ரஜினி, கட்சி தொடங்கினால் அதில் முக்கிய பதவியில் சகாயம் ஐஏஎஸ்சை அமரவைப்பதற்காக முடிவெடுத்த ரஜினிகாந்த், அது தொடர்பாக சகாயம் ஐஏஎஸிடம் பேசி முடிவெடுக்க இரண்டு முறை அழைப்பு விடுத்துவிட்டு காத்திருந்தும், இரண்டும் முறையும் வராமல் ரஜினிக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறார் சகாயம் என்கிறார்கள்.

ரஜினியின் பின்னால் பிஜேபி இருக்கிறது என்றூ சொல்லப்படுவதால் அவர் ரஜினியின் அழைப்பை நிராகரித்துள்ளதாகவே சொல்கிறார்கள்.

ஓய்வு பெறுவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்து இன்று விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார் சகாயம். கடந்த 7 வருடங்களாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத்தலைவராக பதவியில் இருந்து வரும் அவர், முக்கியமில்லாத பதவி என்பதால் விருப்ப ஓய்வை எடுத்திருப்பதாக ஒரு தரப்பினர் பேசிக்கொண்டாலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியலில் ஆர்வம் காட்டவே அவர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளதாகவும் பேச்சு எழுந்திருக்கிறது.

ரஜினியின் அழைப்பை நிராகரித்தாலும் அது நல்லது என்றே இப்போது அவர் நினைத்திருக்க கூடும். கட்சி தொடங்கவில்லை என்று ரஜினி சொல்லிவிட்டதால் அவர் இப்படி நினைக்கக்கூடும்.

‘மக்கள் பாதை’ என்ற அமைப்புடன் இயங்கிவரும் சகாயம், அதை அரசியல் இயக்கமாக மாற்றவும் முயற்சிப்பாரா என்றும் பேச்சு இருக்கிறது.

Related Posts

Leave a Comment