ஆடாமலே ஜெயித்த ரம்யா… ஆர்வகோளாறில் தோற்ற பாலா! பிக்பாஸ் பரிதாபங்கள்

by Lifestyle Editor
0 comment

பொதுவாக ஒரு கேம் ஷோ என்பது சில மணிநேரங்கள் சூட் செய்யப்பட்டு ஆடியன்ஸ்கு அரை அல்லது ஒரு மணி நேரம் காட்டப்படுவது. அந்த படப்பிடிப்புக்கு உட்பட்ட நேரத்தில் மட்டும் போட்டியாளர்கள் கவனத்தோடு இருந்தால் போதும். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இதிலிருந்து மாறுபட்டது. 100 நாட்கள் எப்போது எந்த கேம் வரும் என்று தெரியாமல் காத்திருந்து ஆட வேண்டும். மேலும் அவர்களின் அன்றாட நிகழ்வுகளும் கேம் ஷோவின் ஓர் அங்கம். அதனால், எப்போதுமே கேம் மனநிலையிலேயே இருக்க வேண்டும். தொடக்கத்தில் சில நாட்கள் அப்படியே இருக்க முடியும். ஒரு கட்டத்தில் அது மறந்து இயல்புக்குத் திரும்ப வேண்டியிருக்கும். ஆனால், 100 நாட்கள் நெருங்கியும் கேம் மனநிலையிலேயே பிக்பாஸ் வீட்டில் ஒருவர் இருக்கிறார் அவர் யார்… எப்படி என்பதை கட்டுரையில் பார்ப்போம்.

வேக்கப் ஸாங்க்குப் பிறகு அடுத்த டாஸ்க்கை எதிர்கொள்ள தயாராக இருந்தனர் ஹவுஸ் மேட்ஸ். ரம்யாவும் ஓரிரு நாட்கள் இருந்த சோர்வை உதறியிருந்தார். ஆனால், கேம் சீரியஸானதும் உற்சாகமாக இருந்தவர்கள் களையிழந்தார்கள்.

அடுத்த டாஸ்க் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொருவர் முதுகில் சிடி ஒட்டப்பட்டிருக்கும். அதை மற்றவர் பிடுங்க வேண்டும். இது ஒவ்வொருவரையும் பிடித்து இழுத்து ஆடி ரத்தக்களறியாகும் போட்டி. எனவே, சண்டை நிச்சயம் எனக் காத்திருந்தார் பிக்கி. ஓர் ஓரமாய் பல்லியைப் போல ஒட்டிக்கொண்டார்கள் ரம்யாவும் ஷிவானியும்.

சோபாவே உதிர்ந்தாலும் என்னை நகர்த்த முடியாது என்ற கணக்கில் ஆரி இறுக்கமாக (முகத்தையும் அப்படியே வைத்துக்கொண்டு) உட்கார்ந்து விட்டார். முதலில் சிடியை இழந்தது ரியோ, அடுத்து கேபி, அடுத்து சோம். ரம்யாவின் சிடியைப் பிடுங்க வந்த சோம், கேபி கூப்பிட திரும்பியதும் லாவகமாகத் தட்டிப்பறித்தார் ரம்யா.

இன்னொரு பக்கம், வாங்க டீ சாப்பிட போலாம் என்பதுபோல ஆரியிடம், ‘வாங்கண்ணே போய் சண்டைப்போட்டு சிடியைப் பறிச்சிக்கலாம் என்று கேட்டார் பாலா. ஆனால், ஆரியின் திட்டம் என்னவென்றால், இறுதியில் 2 அல்லது 3 பேர் வரும் வரை அப்படியே உட்கார்ந்துவிடுவோம். அதற்கு அப்பறம் பறிக்கொடுத்தாலும் பாயிண்ட் அதிகம் கிடைக்கும் என்பதுதான். ஆட்கள் நிறைய பேர் சிடியோடு இருப்பதைக் கண்டு ஜெர்க் ஆனார்.

பாலாவே ‘வா… வா’ என்று கூப்பிட்ட பிறகும் செல்லாவிட்டால் ஆரி ஆர்மிக்குக் கோபம் வந்துவிடும் என்பதால் எழுந்து சென்றவர், ஓடிச்சென்று ஷிவானியிடம் இருக்கும் சிடிக்கும் சண்டை போட்டுக்கொண்டிருந்தார். பாலா நெருங்கி வர, தலை தெறிக்க ஓடினார். ‘என்னாது விளையாடலாம்னா ஓடறீங்க’ என்றதும், ‘ஆம்பள பையன் தானே ஓடி வந்து தொடு’ என்று சொன்னதும் சூடானார் பாலா. ஆனால், அதை அடக்கிக்கொண்டு நிதானமாக ஆடினார். சனிக்கிழமை அன்று வரும் கமல்கூட ‘ஆரி அப்படியொன்றும் தவறாக சொல்லவில்லை என்றுதான்’ சொல்வார். பாலா உடைத்தால் பொன்குடமாயிற்றே.

இறுதியில் பாலா வென்றார். இரண்டாம் இடம் ஷிவானி. மூன்றாம் இடம் ரம்யாவுக்கு. இதில் ஷிவானிக்கு இரண்டாம் இடம் கொடுக்க தன்னைத் துரத்தியாக ஆரி புகார் சொல்லிக்கொண்டிருந்தது அபத்தம். ஒரே நேரத்தில் எல்லோருடனும் விளையாடலாம் என்ற ரூல் இருக்கையில் இவரோடு விளையாடி விட்டு வா என்று சொல்வது, தனக்கு ஒரு பாயிண்ட் அதிகம் கிடைப்பதற்கான ஸ்ட்டேட்டர்ஜி அல்லவா? நல்ல கதையாக இருக்கே?

அடுத்த டாஸ்க் பாடலுக்கான பிஜிஎம் ஒலிக்கும். அந்தப் பாடலின் பல்லவி தெரிந்தவர் ஓடிச்சென்று பஸ்ஸரைத் தொட வேண்டும். இந்த டாஸ்க்கை கேவலமாக ஆடியது பாலா. எந்தப் பாடலும் தெரியாமல் ஓடி ஓடிச் சென்று தொட்டு பாடாமல் அப்படியே நின்றார். தானும் ஜெயிக்காமல், மற்றவரையும் ஜெயிக்க விடாமல் செய்தார்.

இந்தக் கும்பல் விளையாட்டில் தான் மாட்டிக்கொள்ளாமல் ஆரி, ரம்யாவும் ஒதுங்கிக்கொண்டனர். அப்பறம் பிக்கி ஒரு ட்விஸ்ட் வைத்தார். தவறாக தொட்டதற்கு மைனஸ் பாயிண்ட்டாம். பாலா அப்பவே முடிவு செய்துவிட்டார் கடைசி இடம் என்று.

0 மதிப்பெண்களோடு இருந்த ரம்யா, சோம், ஆரிக்கு தனிச்சுற்று வைத்தார். ஆடாமலேயே ஒதுங்கி நின்ற ரம்யா ஒரு பாடலைச் சரியாகக் கண்டுபிடித்தார். மைனஸ் பாயிண்ட்ஸ் எல்லாம் கணக்கிட்டு ஷிவானி முதலிடம், ரியோ இரண்டாம் இடம், ரம்யா மூன்றாம் இடம் என வரிசைப்படுத்த எல்லோருக்குமே ஆச்சர்யம்தான். முதல் ஆச்சர்யம் ரம்யாவுக்குத்தான். இதில் மட்டுமல்ல, மற்ற 3 போட்டிகளிலும் சேர்த்து முதல் இடத்தை இப்போதைக்கு பிடித்திருப்பது ரம்யாதான். ஆரியே வந்து வாழ்த்து சொன்னார்.
இந்த டாஸ்க்கின் கடைசி இடம் எல்லோரும் நினைத்தது போல பாலாவுக்குத்தான். ஒரு போட்டியின் விதிகளுக்கு உட்பட்டுத்தான் ஆட வேண்டும். அதில் தங்களது சாமார்த்தியத்தைக் காட்டுவதே திறமை. ஆனால், விதிகளை மீறுவது எப்போது வெற்றியைப் பெற்று தராது. இந்த சீசன் முழுக்கவே பாலா பல டாஸ்க்குகளின் விதிகளை மீறி ஆட்டத்தையே சீர் குலைத்திருக்கிறார். உதாரணமாக, பத்திரம் திருடும் டாஸ்கைச் சொல்லலாம். வழக்கமாக எல்லா போட்டிகளிலும் கேம் மனநிலையிலேயே இருக்கும் ஆரி நேற்று அனைத்து டாஸ்க்குகளிலும் கோட்டை விட்டது ஆச்சர்யம்தான்.

Related Posts

Leave a Comment