3வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் இந்திய வீரர்கள் 11 பேரின் விபரத்தை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒரு நாள் தொடரை இழந்த நிலையில் டி-20 தொரை கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
இதனை தொாடர்ந்து 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.
இரு அணகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட ஜனவரி 7ம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பிளேயிங் லெவனில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.
ஆனால், டெஸ்ட் அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக இடம்பிடித்த மற்றொரு தமிழக வீரரான நடராஜனுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை.
இந்திய பிளேயிங் லெவன்: ரஹானே (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா , ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா, முகமது சிராஜ், நவ்தீப் சைனி(அறிமுகம்).
2வது டெஸ்டில் விளைாயடிய மயங்க் அகர்வாலுக்கு பதிலாக ரோகித் சர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
2வது டெஸ்டில் காயமடைந்து நாடு திரும்பிய உமேஷ் யாதவுக்கு பதிலாக நவ்தீப் சைனிக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
NEWS – #TeamIndia announce Playing XI for the 3rd Test against Australia at the SCG.
Navdeep Saini is all set to make his debut.#AUSvIND pic.twitter.com/lCZNGda8UD
— BCCI (@BCCI) January 6, 2021
நவ்தீப் சைனி தன்னுடைய முதல் சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3வது டெஸ்டில் ப்ரித்வி ஷா, விரிதிமான் சாஹா, முகமது ஷமி, கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ், நடராஜன், மயங்க் அகர்வால் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை.